டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபியிடம் அளித்த புகாரில், தனது அதிகார பூர்வ சமூக வலைதளக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள்  கைப்பற்றி வைத்துள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் மற்றும் முகநூல் கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே சமூகவலை தள கணக்குகளை மீண்டும் தமக்கே வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார். தனது வீட்டில் உள்ள அறையில் தனக்குத் தெரியாமலேயே ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததையும் ராமதாஸ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day