அரசுப் பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். கோத்தகிரி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், இப்பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர் செந்தில்குமார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட மாணவிகளும் ஆசிரியர் செந்தில்குமார் மீது பாலியல்  கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைந்தனர். 

Night
Day