அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை 4 வது முறையாக நீட்டித்து திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏற்கனவே கடந்த 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் 4வது முறையாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.

varient
Night
Day