அண்ணா பல்கலை. வளாக விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நாமக்கல்லை சேர்ந்த சபரீசன் என்ற மாணவன் லெதர் டெக்னாலஜி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10 நாட்களாக தான் பாதியிலேயே படிப்பை நிறுத்தப் போவதாக சக மாணவர்களிடம் சபரீசன் சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதி அறையில் தங்கியிருந்த 3 மாணவர்கள் கல்லூரிக்கு சென்ற நிலையில், சபரீசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day