அண்ணாப் பல்கலை. மாணவி மீது தாக்குதல் - முன்னாள் காதலன் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவி மீது முன்னாள் காதலன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்து திமுக பிரமுகர் ஞானசேகர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்த விளம்பர திமுக அரசு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியது. 

இந்நிலையில் மீண்டும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது. இளங்கலை பொறியியல் படித்த போது ராம்குமார் என்ற மாணவரைக் மாணவி காதலித்துள்ளார்.  இளங்கலை பொறியியல் படிப்புக்குப் பின் மாணவி அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து வரும் நிலையில் ராம்குமாரின் நடத்தை விருப்பத்திற்கு மாறாக இருந்ததால் அவருடன் பேசுவதை மாணவி தவிர்த்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முற்றிலுமாக அவருடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் காதலித்த போது இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி, மாணவியின் மனதை பாதிக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள்  புகுந்து மாணவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி  புகார் அளித்ததை அடுத்து போலீசார் ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் சக மாணாக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day