எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் கே. மகாலிங்கம் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தனி உதவியாளராக பணியாற்றிய K.மகாலிங்கம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் மகாலிங்கம் 1972 ஆம் ஆண்டு முதல் புரட்சித்தலைவருடன் தொடர்ந்து பயணித்து, அவரது இறுதி மூச்சுவரை உடனிருந்து நேர்மையுடன் பணியாற்றியவர் - புரட்சித்தலைவரும் மகாலிங்கம் மீது மிகுந்த நம்பிக்கையையும், அன்பையும் வைத்திருந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அன்பு சகோதரர் மகாலிங்கத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.