க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, அண்ணன் மகள் மீது திமுக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட திமுக விவசாய அணி தலைவராக உள்ள கணேசன் என்பவரின் சகோதரர் முனியசாமி இறந்த நிலையில், அவருக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்ததில் வந்த சுமார் இரண்டரை கோடி ரூபாயை கணேசன் பெற்றுள்ளார். இந்நிலையில், முனியசாமியின் மகள் ஜானகி, தனது சித்தப்பாவான கணேசனிடம் சென்று தனது பங்குத் தொகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசனும் அவரது குடும்பத்தினரும் ஜானகியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழக அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் ஜானகி கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அ?...