ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை இந்தியா வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் போன்று, எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் புதினின் வருகையின்போது நடைபெறாமால் இருக்க பாதுகாப்பு படையினரின் பல அடுக்கு கண்காணிப்பு வளையத்திற்குள் டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு குழுவும் ஆய்வு செய்ய உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக, நாளை இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day