அஜித் மரண வழக்கு : 2வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக திருப்புவனம் ADSP சுகுமாறன் மற்றும் திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நகை காணாமல் போனது தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கோயிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார், போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இளைஞர் அஜித்குமார் மரணத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். முதலில் மடப்புரம் கோயிலில் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகார் தொடர்பான வழக்கின் CSR, FIR ஆவணங்கள் நீதிபதியிடம், ஒப்படைக்கப்பட்டன. இதுமட்டுமின்றி கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள் மற்றும் பென் டிரைவ்களும் ஒப்படைக்கப்பட்டன. 

தனிப்படை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ பதிவு செய்த கோயில் பணியாளரான சதீஸ்வரன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி மற்றும் உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் பாதுகாப்பு அலுவலரும் சிசிடிவி கண்காணிப்பாளருமான சீனிவாசன், அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான கணேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், இன்று 2வது நாளாக சாட்சிகளிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். 

திருப்புவனம் ADSP சுகுமாறன் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து கோயில் உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக் மற்றும் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.

Night
Day