"8 வாரங்களில் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்வும்"

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் நேரில் விசாரணையைத் தொடங்கினார். ஆணையக் குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.

பட்டியலித்தோர் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா  தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று மாலை திருநெல்வேலிக்கு வந்தனர். இதனைத் தொடந்ர்ந்து இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஆகியோரிடம் கவின் ஆணவக்கொலை குறித்தும் காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்தனர். அப்போது கவின் படுகொலை செய்யப்பட்டு 5 நாட்கள் ஆகியும் ஏன் உடலை உறவினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை ஏன் கைது செய்யப்படவில்லை என எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா, தமிழ்நாட்டில் அடிக்கடி இது போன்ற கொலைகள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இக்கொலையில் சுர்ஜித்தின் தாயாரின் பங்கு என்ன வேறு யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பதை விரிவாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். கவின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறி ஆறுமுகமங்கலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதனிடையே கவின் ஆணவப் படுகொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சுர்ஜித் தயாரும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 15-ஆம் தேதிக்குள் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான விசாரணைக் குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்படுள்ளது.



Night
Day