திமுக சார்பில் அமுத கரங்கள் திட்டம் - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அம்பத்தூர் பகுதியில் திமுக உறுப்பினர்கள் அமுத கரங்கள் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அம்பத்தூர் 88வது வார்டு பகுதியில் திமுகவினர் அமுதகரங்கள் என்ற பெயரில் 500 பேருக்கு காலை உணவு வழங்கினர். நிகழ்ச்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யாதால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் பாதிஇடத்தை ஆக்கிரமித்து திமுகவினர் நடத்திய நிகழ்ச்சியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை சாலையில் நடத்தக்கூடாது என்றும் அவ்வாறு நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். 

varient
Night
Day