2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அடுத்தடுத்து 2 அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர்  இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து விவாதிக்க, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடியது. இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களும் முடிந்ததும், பிரதமர் மோடி உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி, அவர் நடத்திய விவாதங்கள் குறித்து விளக்கினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கடுமையான பதிலடி வழங்கும் என பிரதமர்  மோடி உறுதிப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத்தின் திறமை மீதான நம்பிக்கையையும் பிரதமர் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Night
Day