வர்த்தக போரால் தங்கம் விலை உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை விரைவில் சவரன் ஒரு லட்ச ரூபாயை எட்டிவிடும் என்று சென்னை தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் பரஸ்பர வரி விதிப்பு, கச்சா எண்ணெய் விலை குறைவு போன்றவை காரணமாக 110 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கமாக மாற்றி வருவதால் விலை அதிகரிப்பதாக சென்னை தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அட்சய திரிதியை நாளான வரும் 30 ஆம் தேதிக்குள் தங்கம் விலை கிராமுக்கு 10 ஆயிரம் ரூபாயை தாண்டி விடும் என சென்னை தங்க வைர மற்றும் வியாரிகள் சங்க நிர்வாகி சாந்தகுமார் கூறியுள்ளார்.

Night
Day