எழுத்தின் அளவு: அ+ அ- அ
குறைந்தபட்ச ஓய்வூதியமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை, சென்னை கோயம்பேட்டில் போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 6 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாளிகள் வருகை தந்தனர். திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து வருகைதந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போராட்டத்திற்கு செல்ல அனுமதிக்காமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தனர். இதனால் அங்கேயே அமர்ந்து கண்டன கோஷம் எழுப்பிய மாற்றுத்திறனாளிகளை கோஷம் எழுப்பக் கூடாதென போலீசார் தடுத்தனர். இதனால் போராட்டக்கார்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரபரப்பு ஏற்பட்டது.