ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி உடல் நலக்‍குறைவால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினை எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடுமையாக விமர்சித்து வந்தார்.  இந்நிலையில் அறக்கட்டளை மூலம் பணத்தை கையாடல் செய்த வழக்கில் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 2021 ஆண்டு முதல் யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறையில் நவல்னி நடைபயிற்சி சென்ற போது மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்ததாகவும், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிரிழந்த விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Night
Day