எழுத்தின் அளவு: அ+ அ- அ
போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், பதில் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது.
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக போரில் இறங்கிய அமெரிக்கா, அந்நாட்டின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த ஈரான், கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க டிரம்ப் அறிவித்தார். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டதாக அறிவித்தனர். ஆனால் இந்த அமைதி ஒப்பந்தம் கொஞ்சம் நேரம் கூட நீடிக்கவில்லை. போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் படையும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது.