போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது - பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டு நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் உற்சாக வரவேற்பு அளித்தார்.

இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு நேற்று மாலை ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர் உற்சாக வரவேற்பு அளித்து செல்பி' எடுத்து மகிழ்ந்தார். 

இதையடுத்து ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள பெடரல் சான்சலரி அரசு அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஆஸ்திரியா அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹம்மர் ஆகியோர் வியன்னாவில் உள்ள பெடரல் சான்சலரியில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலோசனைக்கு பின்பு உரையாடிய பிரதமர் மோடி, போர்க்களத்தில் உள்ள பிரச்னைகளை தீர்வு காண முடியாது எனவும் எங்கிருந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது எனவும் கூறினார். இந்தியா-ஆஸ்திரியா இடையேயான உரையாடல் மற்றும் ராஜதந்திர விவகாரங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க இருநாடுகளும் ஒன்றாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day