புதினை கொலை செய்ய முயற்சித்ததாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டர் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல முயற்சித்தாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 20ம் தேதி குர்ஸ்க் பகுதிக்கு விளாடிமிர் புதின் சென்ற போது இந்த கொலை முயற்சி நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவித்தன. உக்ரைனின் ட்ரோன் ஒன்று புதினின் ஹெலிகாப்டரை தாக்க முயற்சித்தாகவும், புதின் சென்ற ஹெலிகாப்டரின் பாதையை நெருங்கி வந்த அந்த ட்ரோன் கண்டறியப்பட்டு வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டது என்று பெயர் குறிப்பிடாத பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் அதிபர் புதினின் பயணம் திட்டமிட்டபடி தொடர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து உக்ரைன் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. 


Night
Day