கே.ஆர்.பி. அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து நேற்று ஆயிரத்து 312 கன அடியாக இருந்த நிலையில் இன்று 970 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போதைய நிலவரப்படி நீர் மட்டம் 50 புள்ளி 95 அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 717 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Night
Day