குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் - தடுப்புக்கள் சேதம் - 10வது நாளாக குளிக்கத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் கோரதாண்டவம் ஆடிய காட்டாற்று வெள்ளத்தால் தடுப்புக்கள் சேதமடைந்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் 10-வது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள தான் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், குற்றால பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியின் தடுப்புகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் 10-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளான ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  

Night
Day