உலகம்
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் - 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
பாலஸ்தீன மருத்துவமனைக்குள் மாறுவேடத்தில் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 3 ஹமாஸ் அமைப்பினரை சுட்டு கொன்றனர். பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் செவிலியர்கள், ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்றும் நோயாளிகள் போல் வேடமணிந்து உள்ளே நுழைந்தனர். தங்களது ஆடை மற்றும் சக்கர நாற்காலிகளுக்குள் ஆயுதங்களை மறைத்து உள்ளே நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பாலஸ்தீனியர்களை சுட்டு கொன்றனர். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையங்களில் வைரலாகி வரும் நிலையில், கொல்லப்பட்ட 3 பேரும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
ஒத்திவைக்கப்பட்ட சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடக்கம் -வரும் 15ம்...