உலகம்
3 நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை...
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
தென்னாப்பிரிக்காவில் பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விபத்தில் பேருந்து பயணிகள் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் போட்ஸ்வானா மாகாணம் காபரோன் நகரில் இருந்து வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாளுக்காக பயணிகளுடன் இந்த பேருந்து சென்றுள்ளது. மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து முழுவதும் எரிந்ததில் இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, விபத்திற்கு தென்னாப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவ...