கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கான்சாய் சர்வதேச விமான நிலையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொறியியல் துறையின் அதிசயமாக பார்க்கப்பட்டு வந்த ஜப்பானின் ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கான்சாய் சர்வதேச விமான நிலையம், கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒசாகா மாகாணத்தில் ஏற்பட்ட இடத் தட்டுப்பாட்டுக்கு மாற்றாகவும், விமான நிலைய பகுதியில் ஏற்படும் இரைச்சலால் மக்கள் பாதிப்படைவதை தடுக்கும் வகையிலும் கடந்த 1994ம் ஆண்டு இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. கடலில் இருந்து சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு களிமண் போன்றவற்றை கொண்டு அடித்தளம் அமைக்கப்பட்ட இந்த விமான நிலையம், திறக்கப்பட்டபோது இருந்ததை விட தற்போது 12.5 அடி வரை கடலுக்குள் மூழ்கியிருப்பதாகவும், அருகிலுள்ள விரிவுபடுத்தப்பட்ட 2வது முனையமும் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் பிரச்னை மட்டுமின்றி உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

Night
Day