எழுத்தின் அளவு: அ+ அ- அ
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், இதற்கான பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே 11 நாட்களாக கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறிவிட்டது. ஈரானின் போர்டோ, இஸ்பஹான், நடான்ஸ் ஆகிய 3 அணு சக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா தாக்குவதை முன்கூட்டியே அறிந்து யுரேனியத்தை வேறு இடத்திற்கு ஈரான் மாற்றி உள்ளது. ஃபோர்டோ ஆலையில் இருந்த 400 கிலோ யுரேனியம் மற்றும் உபகரணங்கள் இடமாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.