இஸ்ரேலுக்கு குண்டுகள் வழங்கும் விவகாரத்தில் ஜோ பைடன் விதித்திருந்த தடையை நீக்கினார் அதிபர் ட்ரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் பவுண்டுகள் எடையுள்ள குண்டுகளை வழங்குவதற்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் விதித்திருந்த தடையை நீக்கி தற்போதைய அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.  

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரின் போது, ​​குறிப்பாக காசாவின் ரஃபாவில், பொதுமக்களுக்கு இந்த குண்டுகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த கவலை காரணமாக, பைடன் அந்த குண்டுகளை வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இஸ்ரேலால் ஆர்டர் செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்ட, ஆனால் பைடனால் அனுப்பப்படாத பல விஷயங்கள் இப்போது அனுப்பப்பட்டு வருகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.

Night
Day