ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு தடுப்பூசி கட்டாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டு 10 நாட்களுக்கு பிறகு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும், அதேபோல் அங்கிருந்து வரும் மக்கள் தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்கு பிறகே இந்தியாவுக்குள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Night
Day