திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் மேற்கொண்டார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். அவர், கோயில் வளாகத்தில் இருந்த பேட்டரி கார் மூலம் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, நயன்தாராவை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Night
Day