திருமணமாகி 11 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே திருமணமாகி 11 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கேத்தாண்டப்பட்டி அருகே கூத்தாண்டகுப்பம் கிராம தோட்டகாரன் வட்டத்தை சேர்ந்த நிஷாந்தி என்ற பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கை பிடிக்காததால் நிஷாந்தி தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்தபடியே கல்லூரி படிப்பை மேற்கொண்டுள்ளார். ஆனால் நிஷாந்தியின் பெற்றோர் அவரை கணவருடன் சென்று வாழுமாறு அறிவுரை கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

varient
Night
Day