அமெரிக்கா : பெண்ணின் கழுத்தை பெல்டால் இறுக்கி பாலியல் வன்கொடுமை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தை பெல்டால் இறுக்கி இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூயார்க் நகரைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த நபர் ஒருவர், பெண்ணின் கழுத்தை பெல்டால் இறுக்கி இழுத்துச் சென்று அங்கிருந்த கார்களுக்கு பின்னால் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day