மே 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - தனியார் வானிலை ஆய்வாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மே 15,16 ,17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 12ஆம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா இடையே உருவாகும் காற்று சுழற்சி வலுவடைந்து, மே 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் காரணத்தினால், 12ஆம் தேதி முதலே தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மே 12ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உட்பட பரவலான பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day