41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி சென்ற 2வது இந்தியர் சுபான்ஷு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். இதற்கு முன் ராகேஷ் சர்மா கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். மேலும் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் சுபான்ஷு சுக்லா படைத்தார். 

தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர், இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் விதைகளின் விளைச்சல் உள்ளிட்ட பல்வேறு தாவரவியல் சார்ந்த ஆய்வுகளை சுபான்ஷு சுக்லா மேற்கொள்ள உள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில்  2 வாரம் காலம் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் ஆய்வுகளை முடித்துவிட்டு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்.

Night
Day