"இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி இல்லை" - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அவர், இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று தாம் மனதார நம்புவதாக கூறினார். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்றும் இந்தி மற்றும் இந்திய மொழிகள் ஒன்றாக சேர்ந்து நமது சுயமரியாதை திட்டத்தை அதன் இறுதி இலக்கை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். சிறந்த இந்தியாவை உருவாக்கும் வழியில், நமது இந்திய மொழிகளை வளர்த்து, அவற்றை வளப்படுத்தி அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்போம் என்றும் நமது மொழிகள் இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறுவதை உறுதி செய்யப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Night
Day