3-வது முறையாக பிரதமர் ஆகிவிடலாம் என்ற மோடியின் கனவு பலிக்காது - பிரியங்கா காந்தி திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிவிடலாம் என்ற மோடியின் கனவு பலிக்காது என பிரியங்கா காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் முரைனாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களிடமிருந்து உண்மையை எவ்வளவு காலம் பிரதமர் மோடியால் மறைக்க முடியும் என கேள்வி எழுப்பினார். பாஜகவினரின் பிரசாரம் உண்மையல்ல என்பதை மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், பணவீக்கம், ஊழல், நிதி நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை தான் பாஜகவின் 10 ஆண்டுக்கால சாதனை என்றும் பிரியங்கா காந்தி சாடினார். 

varient
Night
Day