25 லட்சம் புதிய இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நவராத்திரியை முன்னிட்டு 25 லட்சம் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்கள் சக்திக்கு இது சிறந்த பரிசு என்றும், பிரதமர் மோடி துர்கா தேவியை போல் பெண்களை மதிக்கிறார் என்பதற்கு இது மற்றொரு சான்று எனவும் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் உறுதியை மேலும் வலுப்படுத்துவதாக ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டார். இந்த, 25 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளுக்காக மத்திய அரசு தலா 2 ஆயிரத்து 50 ரூபாய் செலவிடும் என்றும் இதன் மூலம் நாட்டில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு எண்ணிக்கை 10 கோடியே 60 லட்சமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day