"உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவோம்"- பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை இந்த பண்டிகை காலத்தில் ஏற்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் சேமிப்பை ஊக்குவிப்பதுடன், அனைவருக்கும் நேரடியாக பலன் அளிக்கும் என்று கூறியுள்ளார். வரி குறைப்பு வேகமான வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும், வரி குறைப்பால் வரி விலக்கு அல்லது 5 சதவீதம் வரி விலக்கு என்ற குறைந்தபட்ச வரி வரம்புக்குள் அத்தியாவசியப் பொருட்கள் வந்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரு இந்தியரின் வியர்வை மற்றும் உழைப்பில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பொருட்களை வாங்க அல்லது விற்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Night
Day