14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 மாநிலங்களில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது.

48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை நவம்பர் 20-ம் தேதிக்கு மாற்றியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் சில சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

varient
Night
Day