1,628 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் - முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் கிறிஸ்டோபர் வாலரின் தெரிவித்த மோசமான கருத்து உலக பங்குச்சந்தைகளை வெகுவாக பாதித்தது. குறைந்த பணவீக்கம் என்பது நிலைத்து நிற்கும் வரை வட்டி விகிதம் குறைக்கப்பட மாட்டாது என கிறிஸ்டோபர் வாலர் கூறிய மோசமான கருத்து உலக பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இந்திய பங்குச்சந்தைகளும் இந்த மோசமான நிகழ்வில் இருந்து தப்பவில்லை. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், ஆயிரத்து 628 புள்ளிகள் சரிந்து, 71 ஆயிரத்து 500 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 460 புள்ளிகள் குறைந்து 21 ஆயிரத்து 571 புள்ளிகளில் நிறைவடைந்தது. ஹெ.சி.எல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகள் லாபத்தையும், ஹெச்.டி.எஃப்.சி., டாட்டா ஸ்டீல், கோட்டாக் மஹிந்திரா, ஹிண்டால்கோ, ஆக்சிஸ் வங்கி பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.

Night
Day