கார்த்திகை தீபத்திருவிழா - விழாக்கோலம் பூண்டது திருவண்ணாமலை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தகோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்க்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியின் கருவரை முன்புள்ள பிரதோஷச நந்தி சிலை அருகில் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க வழிபாடு செய்தனர்.

பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை, சிவாச்சாரியார் கையில் ஏந்தியவாறு திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் வைகுந்த வாயில் வழியாக உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர், முருகன் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது. பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Night
Day