எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத்தில் இருந்து நேற்றைய தினம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே, அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. அப்போது, விமானம் வெடித்து சிதறியதில், தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் 4 மாடி கட்டிடம் கடுமையாக சேதமடைந்தது. இந்த நிலையில் விடுதியின் உணவகத்தில் உணவருந்திக் கொண்டு இருந்த மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் மருத்துவ மாணவர் விடுதியில் இருந்த 24 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 265 ஆக உயர்ந்துள்ளது.