விண்வெளியில் அதிகநேரம் செலவிட்ட வீரர்களின் வரலாறு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்வெளியில் அதிக நாட்கள் இருந்த பெண்களின் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை விண்வெளியில் அதிக நாட்கள் இருந்தவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்...

ரஷ்ய விண்வெளி வீரரான ஒலெக் கொனோனென்கோ 5 முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார். சுமார் 1,110 நாட்கள் விண்வெளியில் இருந்த இவர், விண்வெளியிலேயே அதிக நேரம் செலவிட்ட முதல் விண்வெளி வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ரஷ்யாவிலிருந்து 5 முறை விண்வெளிக்கு சென்ற கென்னடி படெல்கா, சுமார் 878 நாட்கள் விண்வெளியில் இருந்து, அதிக நேரம் விண்வெளியில் இருந்த 2வது விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த மற்றோரு விண்வெளி வீரரான யூரி மாலென்சென்கோ 6 முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார். சுமார் 827 நாட்கள் விண்வெளியில் இருந்த இவர் அதிக நாட்கள் வெண்வெளியில் இருந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சோவியத் யூனியனைச் சேர்ந்த விண்வெளி வீரரான செர்கய் கிரிகலேவ் 6 முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார். அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த விண்வெளி வீரர்களில் 4வது இடத்தில் உள்ள இவர் சுமார் 803 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்தார்.

5ஆவது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் கலேரி 5 முறை விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த இவர் 769 நாட்கள் விண்வெளியில் இருந்து சாதனை படைத்தார்.

6வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான செர்கய் அவ்தேயேவ் மூன்று முறை விண்வெளி பயணம் மேற்கொண்டு 747 நாட்கள் விண்வெளியில் தங்கி இருக்கிறார்.

சோவியத் யூனியனைச் சேர்ந்த விண்வெளி வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் 4 முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார். 7வது இடத்தில் உள்ள இவர் சுமார் 709 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

8வது இடத்தை ரஷ்யாவைச் சேர்ந்த வலேரி பாலியாகோவ் பிடித்துள்ளார். இரண்டு முறை மட்டுமே விண்வெளிக்கு சென்ற இவர் 678 நாட்கள் அங்கு தங்கி சாதனை படைத்தார். 

பெக்கி விட்சன்.. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 4 முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார். சுமார் 675 நாட்கள் விண்வெளியில் இருந்த இவர் விண்வெளியில் அதிக நேரம் செலவிட்ட அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்..

ஃபியோடர் யுரிச்சிகின். இவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆவார். 5 முறை விண்வெளி பயணம் மேற்கொண்ட இவர் சுமார் 672 நாட்கள் தங்கியுள்ளார்.

நாசாவின் மூத்த விண்வெளி வீரராக அறியப்படும் சுனிதா வில்லியம்ஸ் மூன்று முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார். பல்வேறு விண்வெளிப் பயணங்களில் முக்கிய பங்கு வகித்த இவர், 609 நாட்கள் விண்வெளியில் இருந்து சாதனை படைத்துள்ளார்.

Night
Day