மோடிக்கு எதிராக கருத்து- காங். தலைவருக்கு சேலை கட்டிய பாஜகவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து அவதூறாக பதிவிட்ட காங்கிரஸ் தலைவருக்கு பாஜகவினர் சேலை கட்டி விட்ட வீடியோடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரகாஷ் பகரே என்பவர் பிரதமர் மோடி சேலை கட்டியிருப்பது போன்று மார்பிங் செய்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுக்கும் பிரகாஷ் பகேரவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிராகஷ் பகேராவை வலுக்கட்டாயமாக இழுத்து பாஜகவினர் சேலை கட்டி விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Night
Day