முழுபக்க அளவில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை ஏற்று செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரங்களை வெளியிட்டு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். ஆங்கில மருந்துகளைவிட தங்களுடைய ஆயுர்வேத மருந்துகள் சிறப்பானவை என பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த போதிலும் தொடர்ந்து விளம்பரம் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் மன்னிப்பு கோரினர். மேலும் 10 லட்ச ரூபாய் செலவில் 67 நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர். பின்னர் விளம்பரங்கள் அனைத்தும் சிறிதளவில் இல்லாமல் பெரியளவில் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதை ஏற்று இன்று முழுபக்க அளவில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரியது. 

Night
Day