இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஐந்து முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மன் அனுப்பியது சட்டவிரோதம் எனக்கூறி கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால், டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...