மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக அரசு இல்லத்தை காலி செய்த ஸ்மிருதி இரானி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காலி செய்தார். முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, டெல்லியில், 28 துக்ளக் கிரசென்ட் என்ற முகவரியைக் கொண்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார். தன்னை எதிர்த்து நிற்க பயந்து ராகுல் காந்தி தொகுதி மாறி விட்டதாக கிண்டல் செய்த அவர், அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் கிஷோரி லால் சர்மாவிடம் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இந்தநிலையில், புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவையடுத்து ஸ்மிருதி இரானி இல்லத்தை காலி செய்துள்ளார்.

varient
Night
Day