புதுச்சேரி : சுப நிகழ்ச்சியில் ரோஜா பூ கொடுத்து வரவேற்ற "ரோபோ"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி அருகே நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் ரோஜாப்பூ வழங்கி  ரோபோ வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கூனிசம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடாசலபதி - வள்ளி தம்பதியின் வீட்டு சுப நிகழ்ச்சி, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சுப நிகழ்ச்சிகளில் உறவினர்கள் வாசலில் நின்று பன்னீர் தெளித்து பூ கொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால் கணேஷ் என்பவர் புதிதாக அறிமுகம் செய்த ரோபோ, தாவணி உடையில் அனைவருக்கும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அனைவரும் ரோபோவை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். 

varient
Night
Day