அஇஅதிமுக 54-ம் ஆண்டு விழா - திருவள்ளூரில் கழக நிர்வாகிகள் கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக 54ம் ஆண்டு துவக்க விழா திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் அஇஅதிமுக 54ஆம் ஆண்டு துவக்க விழாவை கழக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடினர். பேராசிரியர் கோ.ரஜினி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருப் படங்களுக்கு, முன்னாள் சிறப்பு டெல்லி பிரதிநிதியும், திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எம்.நரசிம்மன் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பும் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளும் வழங்கப்பட்டன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் எல்லாபுரம் எல். ரஜினி, முன்னாள் அரசு வழக்கறிஞர் இ.எம்.எஸ் நடராஜன், ஆனந்தன், குமாரசாமி, கிரிராஜா, ராமமூர்த்தி, ராஜேந்திரன், தனபால், கன்னியப்பன், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Night
Day