கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்து - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

பெருந்துறவு பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளதாக கூறப்படுகிறது.   பரமன்கேணியை சேர்ந்த காசி என்பவரின் கார் மீது சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியுள்ளது. இதில் காசி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன் பாகூரை சேர்ந்த ராஜா என்பவர் மீது அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். அங்குள்ள அபாயகரமான வளைவே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வளைவில் விபத்தை தடுக்க தேவையான பேரிகார்டு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என கூறப்படுகிறது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day