சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் அத்துமீறல் - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரகடம் பகுதியில் உள்ள சிப்காட் பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். வேலை முடிந்து வண்டலூர் -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து 2 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பான புகாரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரகு, சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். 

Night
Day