சென்னைக்கு மிக கனமழை - ஆரஞ்சு எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து 560 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கில் மோன்தா புயல் நிலை கொண்டுள்ளதாகவும், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வட கிழக்கு திசையில் மோன்தா புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திவீர புயலாக  வலுவடைந்துள்ளது. சென்னைக்கு 550 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிலிருந்து 680 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மோன்தா புயலானது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மோன்தா என பெயரிடப்பட உள்ள இந்த புயல், வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திராவின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே நாளை மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, நாளை வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோன்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளதால் அதன் அருகே உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாக அலுவலர் அங்கித் குமார் உத்தரவிட்டுள்ளார். அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் பேரிடர் மீட்பு குழு ஏனாம் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் நிவாரண முகங்கள் செயல்படும் என்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அங்கித் குமார் தெரிவித்தார். புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு எடுத்துள்ளதாக அங்கித் குமார் குறிப்பிட்டார். 


Night
Day