பிரதமர் மோடி பேசினால் டிரம்ப் முழு உண்மையையும் கூறி விடுவார் - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து பேச இயலாத சூழ்நிலைக்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டுள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேசன் சிந்தூரை நிறுத்த எந்த நாட்டு தலைவரும் கூறவில்லை என்று கூறினார். ஆனால், அடுத்த சில மணிநேரங்களில், தனது தலையீட்டின் பெயரிலேயே போர் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி வெளிப்படையாக கூறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறினார். ஆனால், பிரதமர் மோடியால் பேச முடியாது என்று கூறிய அவர், அப்படி பிரதமர் மோடி பேசினால், உண்மையில் என்ன நடந்தது என்பதை டிரம்ப் முழுமையாக கூறிவிடுவார் என்பதால் பிரதமர் மோடியால் பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார். 

Night
Day